Homeசெய்திகள்சினிமா'சொர்க்கவாசல்' படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

‘சொர்க்கவாசல்’ படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

-

- Advertisement -

சொர்க்கவாசல் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சொர்க்கவாசல். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கிறார். 'சொர்க்கவாசல்' படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைக்க பிரின்ஸ் ஆண்டர்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து சானியா ஐயப்பன், கருணாஸ், செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதன்படி இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “சொர்க்கவாசல் படமானது 1999 ஆம் ஆண்டு நடந்த உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி செய்யாத தவறுக்காக ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அதன்பின் அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. இந்த படத்தின் முதல் பாதி அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பாதி இந்த படத்தின் ஒரு முக்கிய பகுதி என்று சொல்லலாம். ஆர்.ஜே. பாலாஜி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். செல்வராகவன் நன்றாக நடித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், “இந்த படம் சிறந்த கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம். முதல் பாதி உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் வன்முறை காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்த படத்தின் மூலம் ஆரஞ்சு பாலாஜி தனது நடிப்பில் இன்னொரு மாற்றத்தை காட்டியிருக்கிறார். செல்வராகவன் கேங்ஸ்டராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இறுகப்பற்று படத்திற்கு பிறகு சானியா ஐயப்பன் நன்றாக நடித்திருக்கிறார். இது உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது” என்று தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

அடுத்தது, “இந்தப் படம் அழுத்தமான கதைக்களத்தை கொண்டிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு அற்புதம். முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதியானது ஈர்க்கக் கூடியதாகவும் வலுவானதாகவும் இருக்கிறது. இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. செல்வராகவன் மிரட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த படம் ஒர்த்தானது” என்று ரசிகர் ஒருவர் தனது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

MUST READ