உணவகம் தொடங்கிய புதுமண நட்சத்திர தம்பதி
- Advertisement -
அண்மையில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதி ஐதராபாத்தில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளனர்.

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முக்கிய மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே மற்றும் கார்த்தியுடன் மீண்டும் தேவ் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அல்லு அர்ஜூன், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ரகுல் நடித்திருக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் அவர், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஜாக்கி பக்னானியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர், அண்மையில் அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணமும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகர் நடிகைள் நடிப்பை தாண்டி பல தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். உணவகம், அழகு சாதன நிறுவனம், விடுதிகள் என பல தொழில்களை தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், நடிகை ரகுலும், புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். ஐதராபாத்தில் மாதாப்பூரில் இந்த உணவகத்தை திறந்துள்ளார். இதற்கு ஆரம்பம் என்று பெயர் வைத்துள்ளார். ரகுலின் உணவகத்தில் சாப்பிட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.