Homeசெய்திகள்சினிமாராம் - மிர்ச்சி சிவா கூட்டணியின் 'பறந்து போ'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராம் – மிர்ச்சி சிவா கூட்டணியின் ‘பறந்து போ’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

ராம் – மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ராம் - மிர்ச்சி சிவா கூட்டணியின் 'பறந்து போ'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இவர், மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இதில் சிவாவுடன் இணைந்து கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான், அஞ்சலி, விஜய் யேசுதாஸ், அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். செவன் ஹில்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதாவது பிடிவாதமாக இருக்கும் மகளுக்கும், மிடில் கிளாஸ் குடும்ப தலைவனான தந்தைக்கும் இடையிலான பயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.ராம் - மிர்ச்சி சிவா கூட்டணியின் 'பறந்து போ'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படக்குழு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படமானது 2025 ஜூலை 4ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ