அனிமல் பட இயக்குனருடன் ராம் சரண் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ராம் சரண் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர் பெடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து ராம் சரண், சுகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அடுத்தது இவர் அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் கைகோர்க்க உள்ளார் என புதிய தகவல் தெரிவிக்கின்றன.

அதாவது சந்தீப் ரெட்டி வங்கா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சுமார் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. இதன் பின்னர் இவர் ராம் சரணை இயக்குவார் என்றும் இந்த படத்திற்கு டெவில் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.