Homeசெய்திகள்சினிமாசென்னை வந்தடைந்தார் ராம்சரண்... இந்தியன்2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருகை... சென்னை வந்தடைந்தார் ராம்சரண்… இந்தியன்2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருகை…
- Advertisement -
நாளை நடைபெற இருக்கும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ராம்சரண் சென்னை வந்தடைந்தார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன், சுஹாசினி, கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, செந்தில், கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இதைத் தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தையும் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடித்திருக்கிறார். படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு அரங்கில், பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கு நடிகர் ராம்சரண், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ராம்சரண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது..