நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பற்றி இந்திய அளவில் பிரபலமானது. இதைத்தொடர்ந்து ராம்சரண் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் 2024 செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அடுத்ததாக ராம்சரண், உப்பென்னா பட இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் தனது 16ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் உடன் இணைந்து ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்த படம் பூஜை உடன் சமீபத்தில் தொடங்கியது. மேலும் ராம்சரண், ரங்கஸ்தலம், புஷ்பா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. அதன்படி இது தொடர்பான அறிவிப்பு வருகின்ற மார்ச் 27 ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Mighty forces reunite for an earth-shattering magnum opus 🔥❤🔥
Global Star @AlwaysRamCharan X The Maverick Director @aryasukku X Rockstar @ThisisDSP X @MythriOfficial X @SukumarWritings = #Raring2Conquer 🐎#RC17 is all set to add new colours to the Indian Cinema ❤🔥 pic.twitter.com/ISRZaumDng
— Mythri Movie Makers (@MythriOfficial) March 25, 2024
ஆனால் தற்போது அதற்கு முன்பாகவே ராம்சரணின் 17 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்காலிகமாக RC17 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த புதிய படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார் என்றும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரங்கஸ்தலம் பட கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.