Homeசெய்திகள்சினிமாரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?...... இயக்குனர் விளக்கம்!

ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!

-

- Advertisement -

ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தற்போது சந்திப் ரெட்டி வங்கா 5 வருடங்கள் கழித்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரன்பீர் கபூர் உடன் இணைந்து ராஷ்மிகா, பாபி தியோல், சுரேஷ் ஓபராய், அணில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சீனி ஒன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அமித் ராய் ஒளிப்பதிவு செய்ய மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

அனிமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஆனால் தற்போது அனிமல் திரைப்படம் டிசம்பர் 1இல் வெளியாகும் என்று தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, “ஆகஸ்ட் 11 இல் அனிமல் திரைப்படத்தை வெளியிடாததற்கு காரணம் குவாலிட்டி தான். உதாரணமாக 7 பாடல்கள் உண்டியலில் அந்த 7 பாடல்களும் 5 மொழிகளில் மாற்றப்பட வேண்டும். அதாவது 35 பாடல்களையும் 35 பாடல் ஆசிரியர்கள் மற்றும் பாடகர்களை வைத்து பாட வைக்க வேண்டும். இதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். நான் இதனை தாமதமாக தான் உணர்ந்தேன். படத்தின் டீசருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ