- Advertisement -
உடல் முழுக்க ரத்தக் கறையுடன் இருக்கும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார். சந்தீப் ரெட்டி இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர்


அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டையும் நடத்தியது. 750 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது. அமெரிக்காவில் அனிமல் திரைப்படத்திற்கு வசூல் குவிந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனிமல் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும், இப்படத்திற்கு அனிமல் பார்க் என்றும் தலைப்பு வைப்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது.



