ராஷ்மிகா மந்தனா ரசிகர் ஒருவரின் சர்ச்சை கேள்விக்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா ஆரம்பத்தில் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீத கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இந்தியாவில் பிரபலமாக உள்ள இவரை பலரும் நேஷனல் கிரஷ் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகி விஜயுடன் இணைந்து வாரிசு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதேசமயம் இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா, புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்த பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் அனிமல், சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து கலக்கி வருகிறார். தற்போது தனுஷின் குபேரா , தி கேர்ள் பிரண்ட் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர், “அழகாக தான் இருக்கிறீர்கள். ஆனால் நடிக்க தான் தெரியவில்லை” என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு ராஷ்மிகா, “மிகவும் அழகாய் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். நன்றி” என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.