spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரவி மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படம்..... தயாரிப்பாளரிடம் கௌதம் மேனன் வைத்த கோரிக்கை!

ரவி மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. தயாரிப்பாளரிடம் கௌதம் மேனன் வைத்த கோரிக்கை!

-

- Advertisement -

கௌதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ரவி மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படம்..... தயாரிப்பாளரிடம் கௌதம் மேனன் வைத்த கோரிக்கை!நடிகர் ரவி கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதைத்தொடர்ந்து SK 25, RM 34 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதேசமயம் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் படம் இயக்குவதுடன் மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இயக்குனர் கௌதம் மேனன், வெற்றிமாறன் கதையில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன்படி இந்த படத்தில் நடிகர் ரவி கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.ரவி மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படம்..... தயாரிப்பாளரிடம் கௌதம் மேனன் வைத்த கோரிக்கை! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் கௌதம் மேனன் இயக்கத்தில் ரவி நடிக்க உள்ள புதிய படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக சொல்லப்படுகிறது. அத்துடன் தயாரிப்பு நிறுவனத்திடம் கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படம் லவ் சப்ஜெக்ட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ