spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவழக்கறிஞராக ஆர்.ஜே. பாலாஜி.... 'சூர்யா 45' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்!

வழக்கறிஞராக ஆர்.ஜே. பாலாஜி…. ‘சூர்யா 45’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

சூர்யா 45 படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.வழக்கறிஞராக ஆர்.ஜே. பாலாஜி.... 'சூர்யா 45' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்!

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சொர்க்கவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராக வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து இவர் சூர்யாவின் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் சூர்யா, திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே பொள்ளாச்சி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞராக ஆர்.ஜே. பாலாஜி.... 'சூர்யா 45' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்!மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. அதே சமயம் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என செய்திகள் பரவி வந்தன. அத்துடன் ஆர் ஜே பாலாஜியும் வழக்கறிஞராக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ஆர் ஜே பாலாஜி, வக்கீல் உடையில் இருக்கும் சூர்யா 45 படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ