ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர். அதேசமயம் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பில் இருந்து தற்போது வரை ரேடியோ ஜாக்கியாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த ஆர்.ஜே பாலாஜி தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வருகிறார்.
இவர் விஜய் சேதுபதியின் நானும் ரெளடி தான் படத்தின் மூலம் பிரபலமாகி எல் கே ஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக களமிறங்கி பெயரையும் புகழையும் பெற்றார். அடுத்ததாக இவர் திரிஷா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீபகாலமாக செய்திகள் பரவி வருகிறது. அதன்படி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இந்த படத்திற்கு மாசாணி அம்மன் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படத்தை குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் மூலம் இந்த படம் திரில்லர் கதை களத்தில் உருவாக இருப்பதை தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஆர் ஜே பாலாஜியின் 39வது பிறந்த நாளான இன்று (ஜூன் 20) வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -