சப்தம் திரைப்படம் மீண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே இதன் வெற்றியை தொடர்ந்து அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள சப்தம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா ஆகியோரின் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் தமன் இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் நேற்று (பிப்ரவரி 28) தமிழ் மொழியை தவிர தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. அந்த வகையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இப்படம் லைசன்ஸ் தொடர்பான பிரச்சனை காரணமாக நேற்று வெளியிடப்படவில்லை.
#Sabdham – All issues Sorted..🤝 In Cinemas From Today..✅ pic.twitter.com/KI20WxjEVU
— Laxmi Kanth (@iammoviebuff007) March 1, 2025
இருப்பினும் நள்ளிரவு 2 மணி அளவில் சப்தம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துவிட்டதாகவும் நேற்று இப்படம் வெளியாகதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிவழகன் மற்றும் ஆதி ஆகிய இருவரும் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தனர். எனவே இன்று (மார்ச் 1) இந்த படத்தை திரையில் காண ஆவலுடன் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படம் மீண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. இந்த தகவல் தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.