பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யாஸ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் சாப்டர் 1, கேஜிஎப் சாப்டர் 2 போன்ற வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியுள்ளார். கே ஜி எஃப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே பிரபாஸின் சலாம் படத்திற்கும் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து வெளியான ஆஹாச சூரியனே பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் பிரபாசும் பிரித்திவிராஜும் உயிர் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம் அவர்களை எதிரிகளாக மாற்றி விடுகிறது. இதுவே சலார் படத்தின் முழு நீள கதையாகும். சலாம் படத்தில் ஆக்சன் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளும் சம அளவில் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் இயக்குனர் கூறி இருந்தார். எனவே இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நாளை இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ், பிரித்விராஜ், ராஜமவுலி ஆகியோரின் சலார் நேர்காணல் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாக இருக்கிறது. இது குறித்த ப்ரோமோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
The #SalaarReleaseTrailer might have hit the snooze button, but fear not! It’s set to be out 2 PM 🔥 Stay Tuned!
— Hombale Films (@hombalefilms) December 18, 2023
இந்நிலையில் இன்று காலை 10.42 மணியளவில் வெளியாக இருந்த சலார் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர், இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.