சல்மான் கானின் சிக்கந்தர் பட முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சல்மான் கான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் சிக்கந்தர். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சாஜித் நதியத்வாலா தயாரிக்க பிரிட்டாம் இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற ரம்ஜான் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இருந்து ‘Zohra Jabeen’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரிகளை சமீர், தனிஷ் சப்ரி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள நிலையில் நாகாஷ் ஆசிஸ், தேவ் நேகி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலானது சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்குமான திருமண பாடல் போல் தெரிகிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.