‘சிட்டாடெல்’ சீரிஸ் ரீமேக் இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் நடிப்பில் ‘சிட்டாடெல்’ என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்டாடெல் சீரிஸ் ஏப்ரல் 28, அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியது.

இந்த சீரிஸ் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடி அப்படியே இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் சமந்தா மற்றும் வருண் தவான் இருவரும் தான் நடிக்கின்றனர்.
பேமிலி மேன் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே கூட்டணி தான் ‘சிட்டாடெல்’ சீரிஸ் இந்திய பதிப்பையும் இயக்குகின்றனர். பேமிலி மேன் சீரிஸ் இரண்டாம் பாகத்தில் சமந்தா மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆங்கிலத்தில் உருவாகிய சிட்டாடெல் வெப் சீரிஸ் ஏற்கனவே மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்புகிறது. பிறகு எதற்கு தனியாக நடிகர்களை வைத்து மீண்டும் ரீமேக் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சமந்தா அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். சிட்டாடெல் இந்தியாவில் ரீமேக் ஆகவில்லை. மாறாக, ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு கதைக்கு முக்கியத்துவம் உள்ளது. இந்திய வெப் சீரிஸ் அசல் சீரிஸ் உடன் கதையில் தொடர்பைக் கொண்டிருக்கும். ஆனால் முழுக்க ரீமேக் என்று சொல்ல முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.