spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமந்தா கைகளில் படப்பிடிப்பின்போது காயம் அடைந்தது

சமந்தா கைகளில் படப்பிடிப்பின்போது காயம் அடைந்தது

-

- Advertisement -

சமந்தா ரூத் பிரபு சிட்டாடலின் இந்தியப் பதிப்பின் படப்பிடிப்பில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை நோயால் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் சினிமா படப்படிப்பில் நடிக்க தொடங்கினார்.

தற்போது, சமந்தா சிட்டாடல்(Citadel) செட்டில் இருந்து காயப்பட்ட கைகளின் காட்சியைப் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தனது விறுவிறுப்பான அதிரடி வலைத்தளத்தொடரான ​​சிட்டாடல்(Citadel) படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

we-r-hiring

நடிகர் வருண் தவானுடன் இணைந்து, தொடரின் சிட்டாடல் இந்திய பதிப்பில் நடித்து கொண்டிருக்கும், அவர் சமீபத்தில் தனது காயப்பட்ட கைகளின் பார்வையை வழங்கும் புகைப்படத்தை செட்டில் இருந்து பகிர்ந்துள்ளார்.

சமந்தா தனது சமூக வலைத்தளம் ஸ்டோரியில் காயம்பட்ட கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரின் விரல்களில் இரத்தக் கறைகள் மற்றும் காயங்கள் காணப்படுகின்றன. இணையத் தொடரில் சமந்தா சில அதிரடி காட்சிகளை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது.

சமந்தா, தற்காப்புக் கலைப் பயிற்சிக்காக ஹாலிவுட் ஆக்‌ஷன் இயக்குநரையும் கூட தயாரிப்பாளர்கள் அழைத்துள்ளனர்.

MUST READ