ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதன்படி சில மாதங்களுக்கு முன்பாகவே ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதாவது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கப் போகிறார் என்றும் தகவல் கசிந்தது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு மோஷன் போஸ்டர் அடங்கிய வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் அந்த வீடியோவின் இறுதியில் ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சந்தீப் கிஷன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிபடங்களில் பணியாற்றி வருபவர். தமிழில் இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.