தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான சஞ்சய் தத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சஞ்சய் தத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சஞ்சய் தத்தின் 64வது பிறந்த நாளான இன்று லியோ படத்தின் மிரட்டலான கிளிம்ஸ்
வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பூரி ஜெகன்நாத் இயக்கும் ‘டபுள் இஸ்மார்ட் ‘ என்ற படத்தில் நடிக்க உள்ளார். டபுள் ஸ்மார்ட் என்ற திரைப்படமானது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்மார்ட் ஷங்கர் என்ற படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளது.
இஸ்மார்ட் சங்கர் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க ராம் பொத்தினெனி நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள ‘டபிள் இஸ்மார்ட்’ படத்தை கூறி ஜெகன்நாத் தயாரித்து இயக்குகிறார். ஹை பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சஞ்சய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது. சஞ்சய் தத் இந்த படத்தில் பிக் புல் BIG BULL என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.