Homeசெய்திகள்சினிமாசந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' கலக்கியதா? சொதப்பியதா?.... முழு விமர்சனம்!

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ கலக்கியதா? சொதப்பியதா?…. முழு விமர்சனம்!

-

- Advertisement -

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் இன்று (மே 16) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தை ஆர்யா தயாரித்திருக்கிறார். ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' கலக்கியதா? சொதப்பியதா?.... முழு விமர்சனம்!படத்தில் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, யாஷிகா, நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.

இந்த படத்தில் சந்தானம், கிஸ்ஸா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து பல படங்களை நெகட்டிவாக விமர்சித்து வரும் நிலையில், உங்களுக்கு ஸ்பெஷல் ஷோ காட்டுறோம், தியேட்டருக்கு வாங்க என்று அழைப்பு வர, அந்த ஸ்பெஷல் ஷோவை பார்க்க சந்தானம் செல்கிறார். சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' கலக்கியதா? சொதப்பியதா?.... முழு விமர்சனம்!அங்க போன பின்னர் தான் தெரிகிறது அது பேய்களின் தியேட்டர் என்று. அங்குள்ள பேய்கள் சந்தானத்திற்கு ஒரு பேய் படத்தை காட்ட அந்த படத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து தப்பித்து வந்தால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று தியேட்டரில் உள்ள பேய்கள் கண்டிஷன் போடுகின்றன. அதன் பிறகு படத்திற்குள் ஆட்டிப்படைக்கும் பேய்களிடமிருந்து சந்தானம் தப்பித்து வந்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை. படத்திற்குள் படம் காட்டி வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' கலக்கியதா? சொதப்பியதா?.... முழு விமர்சனம்!நடிகர் சந்தானமும் வழக்கம் போல் டைமிங் காமெடியில் பின்னி பெடல் எடுக்கிறார். சினிமா விமர்சகராக ஹேர் ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் வித்தியாசமாக தோன்றியுள்ளார் சந்தானம். மேலும் செல்வராகவன் பேயாக அசத்தியுள்ளார். அடுத்தது படத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்னவென்றால், கௌதம் மேனன் – யாஷிகாவின் காதல் காட்சி தான். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' கலக்கியதா? சொதப்பியதா?.... முழு விமர்சனம்! இது தவிர, எலி காமெடி, டாய்லெட் காமெடி என பல இடங்களில் இடம்பெறும் காமெடி காட்சிகளில் மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி ஆகியோர் ஸ்கோர் செய்கின்றனர். யாஷிகாவின் கிளாமர் தூக்கலாக இருக்கிறது. இசையமைப்பாளர் ஆஃப்ரோவின் பின்னணி இசை பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் தீபக் குமாரின் ஒளிப்பதிவு அதை ஈடு செய்துள்ளது. சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' கலக்கியதா? சொதப்பியதா?.... முழு விமர்சனம்!ஆனால் டிடி ரிட்டன்ஸ் அளவிற்கு காமெடிகள் இல்லாததுதான் படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. இருப்பினும் குழப்பமான திரைக்கதையை ரசிகர்களுக்கு புரியும்படி தந்து பாராட்டுகளை பெறுகிறார் பிரேம் ஆனந்த். எனவே குடும்பத்துடன் கண்டுக்களிக்கும் ஒரு நகைச்சுவை படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல்.

MUST READ