Homeசெய்திகள்சினிமா'பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'..... விளக்கமளித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' இயக்குனர்!

‘பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை’….. விளக்கமளித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ இயக்குனர்!

-

- Advertisement -

'பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'..... விளக்கமளித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' இயக்குனர்!கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான டிக்கிலோனா படத்திற்கு பிறகு சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கியுள்ள படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம் எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய் ரிங்டோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கிறது.'பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'..... விளக்கமளித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' இயக்குனர்! இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்படும் பெரியார் அவர்களை அவமதிப்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது. அதே சமயம் சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் பொங்கல் தினத்தன்று “நான் அந்த ராமசாமி இல்லை” என்று பதிவிட்டிருந்தார். சந்தானம் வெளியிட்ட இந்த பதிவு பல்வேறு எதிர்ப்புகளை கிளப்பியது. ஆகையால் சில மணி நேரங்களில் சந்தானம் பதிவினை டெலிட் செய்தார். இருந்த போதிலும் நெட்டிசன்கள் பலரும் சந்தானம் பெரியாரை அவமதிப்பது போன்று வெளியிட்ட பதிவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை..... விளக்கமளித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' இயக்குனர்!இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி, ” மக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. பெரியாரை அவமதிக்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை. படத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. படத்தின் ஆடியோ லான்சில் சந்தானம் இது தொடர்பான விளக்கத்தை கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.

MUST READ