spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா25 நாட்களை கடந்து வெற்றி நடை போடும் சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு'!

25 நாட்களை கடந்து வெற்றி நடை போடும் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 25 நாட்களை கடந்து வெற்றி நடை போடும் சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு'!அடுத்ததாக ஹீரோவாக உருவெடுத்த சந்தானம் அடுத்தடுத்த பல படங்களில் பிசியாக நடிக்க வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி எனும் திரைப்படம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் சந்தானம். இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் தயாரித்திருந்தார். டி இமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சந்தானம் தவிர பிரியாலயா, விவேக் பிரசன்னா, தம்பி ராமையா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 25 நாட்களை கடந்து வெற்றி நடை போடும் சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு'!சந்தானத்தின் மற்ற படங்களைப் போல் இந்த படமும் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருந்தது. இந்த படம் கடந்த மே 17 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றி நடை போடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ