பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2017 இல் வெளியான ப. பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாகவும் தனுஷ் அறிவித்துள்ளார். அதே சமயம் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் தனுஷ், தனது அக்கா மகனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சென்னையில் இதன் படப்பிடிப்புகளும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். தனுஷ் இதில் கேமியா ரோலில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் சம்பந்தமான அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளி வருகின்றன. அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி வரும் இந்த புதிய படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.