Homeசெய்திகள்சினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சசிகுமார்..... மன்னிப்பு கேட்ட 'நந்தன்' பட இயக்குனர்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சசிகுமார்….. மன்னிப்பு கேட்ட ‘நந்தன்’ பட இயக்குனர்!

-

சசிகுமார் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் நந்தன். இந்த படத்தினை இரா. சரவணன் இயக்கியிருந்தார்.இன்று பிறந்தநாள் கொண்டாடும் சசிகுமார்..... மன்னிப்பு கேட்ட 'நந்தன்' பட இயக்குனர்! இந்தப் படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ் மிதுன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சசிகுமார் இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடித்திருப்பார். அதாவது இந்த படமானது பட்டியல் என பஞ்சாயத்து தலைவர்கள் பலரின் துயர கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தினையும் சசிகுமாரின் நடிப்பினையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சசிகுமார் இன்று (செப்டம்பர் 28) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே சசிகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நந்தன் படத்தின் இயக்குனர் இரா. சரவணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் மிக நீளமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சசிகுமார்..... மன்னிப்பு கேட்ட 'நந்தன்' பட இயக்குனர்!அந்த பதிவில் நந்தன் படப்பிடிப்பின் போது சசிகுமாரை கஷ்டப்படுத்தியது தொடர்பாக கூறியிருக்கிறார். “அவரை முகத்தில் மிதிச்சி பாத்ரூமில் பிடித்து தள்ளுகின்ற காட்சியை படமாக்கினேன். இவ்வளவு இவ்வளவு கஷ்டங்கள் கொடுத்திருந்தும் அவர் என்னை எதுவுமே சொல்லவில்லை. ஒரு இயக்குனராக நான் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். அதை நிறைவேற்றலாம். ஆனால் ஒரு கதாநாயகனாக அவர் இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பது தேவையில்லை. அவர் படத்தையே நிறுத்திவிட்டு கிளம்பி இருக்கலாம். ஆனால் சசி சார் எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு நின்றார். படம் வந்த பிறகு பலரும் அவரைப் பாராட்டியதை என்னிடம் சொன்னார்.

சீமான் அண்ணன் பாராட்டியதை சொன்னார். ‘என் படம் வரும்போது எல்லாம் நல்லா பண்ணியிருக்கேன்னு பல பேர் சொல்லுவாங்க. ஆனால் நந்தன் படம் பார்த்துட்டு நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க. ஒரு நடிகனுக்கு இது தாங்க தேவைப்படுது’ என்று என் கைகளைப் பற்றிக் கொண்டார். நான் அமைதியாக நின்றேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்ற வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருந்தார் சசி சார். என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டார் இரா. சரவணன்.

MUST READ