சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் சசிகுமார், மை லார்ட், எவிடென்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் ஃப்ரீடம் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மாளவிகா அவினாஷ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்ய சிவா எழுதி, இயக்க ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற ஜூலை 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. செய்யாத தப்புக்காக சசிகுமாருடன் சேர்ந்து சில அப்பாவிகளை ஜெயிலில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். அங்கிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது தான் ஃப்ரீடம் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.