நகைச்சுவை நடிகர் தற்போது வித்தைக்காரன் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த வெங்கி இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கே விஜய் பாண்டி படத்தை தயாரித்துள்ளார். விபிஆர் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் சதீஷ்க்கு கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், ஆனந்தராஜ், தங்கதுரை, ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.வித்தை காரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படத்தில் சதீஷ் மெஜிசியனாக நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முழுவதும் நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
நடிகர் சதீஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நாய் சேகர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.