இயக்குனர் பிரேம்குமார் சியான் 64 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி – திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான ’96’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் இயக்குனர் பிரேம்குமார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில், அடுத்தது இவர் ’96 பாகம் 2′ படத்தை எப்போது இயக்குவார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கிடையில் கார்த்தி- அரவிந்த்சாமியின் ‘மெய்யழகன்’ என்ற மென்மையான, அழகான படத்தைக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதாவது ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் இவர் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும், பழைய நினைவுகள் – அன்பு – உணர்ச்சி ஆகியவற்றை கனெக்ட் செய்த விதமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து இவர், விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி சியான் 64 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘சியான் 64’ படம் குறித்து பேசி உள்ளார்.
Dir #Premkumar Recent
– #Chiyaan64 writing work is going on, I want to allocate 3 to 4 months for the script.#ChiyaanVikrampic.twitter.com/PbvIyAD9ye— Movie Tamil (@_MovieTamil) September 9, 2025

அதன்படி அவர், “சியான் 64 படத்தின் எழுத்து வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஸ்க்ரிப்ட் பணிகளை முடிக்க மூன்று முதல் நான்கு மாதங்கள் ஒதுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.