Homeசெய்திகள்சினிமாசீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

சீனு ராமசாமி இயக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

சீனு ராமசாமி இயக்கும் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை என பல மண் பேசும் கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இடி முழக்கம் திரைப்படத்தையும், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இதுவரை ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது.

அதே சமயம் சீனு ராமசாமி கோழிப்பண்ணை செல்லதுரை என்ற புதிய படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஏகன் கதாநாயகனாக நடிக்க பிரிகிடா சகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், குட்டிப்புலி தினேஷ், சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அசோக் ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய என் ஆர் ரகுநந்தன் இதற்கு இசையமைத்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

கிராமத்துக் கலைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ