சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருந்த கோழி பண்ணை செல்லதுரை படத்தின் டீசரை நடிகர் சூரி வெளியிடுகிறார்.
இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் கூடல் நகர், நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை என பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய படங்களில் பெரும்பாலும் மண்வாசம் மற்றும் மனிதன் பேசும் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இவரது இயக்கத்தில் இடிமுழக்கம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் 2024 செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் ஆகியோரின் நடிப்பில் இவர் இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படமும் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான் சீனு ராமசாமி, கோழிப்பண்ணை செல்லதுரை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்துக் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஜோ படத்தில் நடித்திருந்த ஏகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து யோகி பாபு மற்றும் பிரகிடா சகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை விஷன் சினிமா மூவி நிறுவனம் தயாரித்திருக்கிறது. என் ஆர் ரகுநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் நாளை (ஆகஸ்ட் 14) மதியம் 3 மணி அளவில் வெளியாக இருக்கிறது. அதன்படி நடிகர் சூரி இந்த டீசரை வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.