Homeசெய்திகள்சினிமாபிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

எவர்கிரீன் நாயகி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று. அவர் இன்றைக்கும் உயிரோடு இருந்திருந்தால் தனது 61 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிஇருப்பார்.பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்! ஆனால் விதியை யாரால் வெல்ல முடியும் என்பது போல் அவரின் இழப்பு இன்றுவரையிலும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. அவர் இறந்து ஆறு வருடங்களானாலும் அவர் ஒரு பாத்ரூம் டப்பில் இறந்து கிடந்தார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. 1970 காலகட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றிய நடிகை ஸ்ரீதேவி பலரின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவருடைய அசாத்திய நடிப்பிற்கும் நளினமான நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்த சிகப்பு ரோஜாக்கள் எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நினைவோ ஒரு பறவை எனும் பாடல் இன்றைய இளைஞர்களையும் முணுமுணுக்க வைக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.
பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!இவ்வாறு டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மூன்று முடிச்சு, 16 வயதினிலே வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு என பல படங்களில் நடித்து தனக்கான அடையாளத்தை நிலை நிறுத்தி தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். மேலும் இவர் பல விருதுகளையும் வென்றிருக்கிறார். பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!ஆனால் இறுதியில் தேசிய விருது பெறுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்து விட்டார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கோலாச்சி செய்தவர் ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கிறார். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நடிகை ஸ்ரீதேவி ஒரு படத்தில் கமிட்டானால் அதை சொன்ன நேரத்திற்கு முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைப்பாராம். பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!மேலும் கேமரா முன்பு அவர் வந்து விட்டால் தன்னுடைய நடிப்பை மிகவும் நேர்த்தியாக தந்து விடுவாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஸ்ரீதேவியின் நடிப்பை கண்டு வியந்து அவரை ஒரு பிறவி நடிகை என்று பாராட்டியிருக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஸ்ரீதேவி தான். இன்றுவரையிலும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஸ்ரீதேவி தான் ரோல் மாடல் என்று பல நடிகைகள் கூறி இருக்கிறார்கள்.பிறவி நடிகை என்று பலராலும் பாராட்டப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஸ்பெஷல்! நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரங்களோடு ஒன்றிணைந்து நடிக்க கூடிய ஸ்ரீதேவியின் இழப்பு திரை உலகிற்கே மிகப்பெரிய இழப்பு என்று இசைஞானி இளையராஜா கூறியிருந்தார். இந்திய அளவில் உலக அளவில் பெருமை சேர்த்த பெருந்தாரகை என்றும் ஸ்ரீதேவி ஒரு நல்ல கலைஞர் என்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூறியிருந்தார். சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடிய ஸ்ரீதேவி மீண்டும் அவரது மகள் வயிற்றில் பிறந்து நடிக்க வருவார் என்று நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 13) அவரின் நினைவுகளை எண்ணி பெருமைப்படுவோம்.

MUST READ