Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் வைரலாகும் 'கொட்டுக்காளி' பட டிரைலர்!

இணையத்தில் வைரலாகும் ‘கொட்டுக்காளி’ பட டிரைலர்!

-

கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.இணையத்தில் வைரலாகும் 'கொட்டுக்காளி' பட டிரைலர்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அதேசமயம் இவர் தனது எஸ் கே ப்ரோடக்ஷன்ஸ் சென்ற நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி எனும் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இணையத்தில் வைரலாகும் 'கொட்டுக்காளி' பட டிரைலர்!இந்த படத்தை கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்க இருக்கிறார். படத்தில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய கணேஷ் சிவா எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். நடிகர் சூரியின் விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இந்த படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஆகையினால் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டிரைலரை பார்க்கும்போது படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது ட்ரெய்லர் முழுவதுமே சேவல் கொக்கரிக்கும் இசை இடம் பெற்றிருப்பது தான். ஏனென்றால் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்டை வைத்து தான் படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் சூரியின் விடுதலை, கருடன் ஆகிய படங்களை போல் ரசிகர்களின் பேராதரவை பெறும் என்று நம்பப்படுகிறது.

MUST READ