சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் மற்றுமொரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் வலம் வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேசமயம் நீர் பறவை, மாமனிதன் போன்ற வெற்றி படங்களையும் இயக்கி இருக்கிறார். இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் போன்ற படங்கள் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர் கோழிப்பண்ணை செல்லதுரை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், ஐஸ்வர்யா தத்தா, பிரிகிடா, சத்யா தேவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். அசோக் ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அண்ணன் – தங்கை உறவை மையமாக வைத்து கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. திரைக்கு வந்த முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே இந்த படம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தான் இந்த படத்தில் நடித்ததற்காக சத்யா தேவி சிறந்த நடிகை காண விருதை வென்றுள்ளார். அதே சமயம் சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் நாமினேஷன் என்ற தகுதியையும் பெற்றது. அடுத்தது ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது இந்த கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம். அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஜிரோனா திரைப்பட விழாவில் இந்த படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை செல்லதுரை, இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.