spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபேஷன் டிசைனரை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பரபரப்பு புகார்!

பேஷன் டிசைனரை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பரபரப்பு புகார்!

-

- Advertisement -

திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆடை வடிவமைப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.பேஷன் டிசைனரை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பரபரப்பு புகார்!நடிகரும், பிரபல சமையல்துறை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாய் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.  பின்னர் மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசும்பொருளானது. இதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் எனவும் அறிவித்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல்வேறு விதமாக விமர்சனங்கள் கிளம்பியது.

we-r-hiring

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி  விட்டதாக ஜாய் கிரிசில்டா அவரது வயது முதிர்ந்த தாயுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளாா். அந்த புகாரில், 2011ஆம் ஆண்டு முதல் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறேன்.  பெட்ரிக் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் இருந்து வரும் நிலையில், 2020ஆம் ஆண்டு முதல் குடும்ப பிரச்சனை காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு நண்பர் மூலமாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் இருவரும் காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு முதல் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தன்னிடம் தெரிவித்து நம்ப வைத்ததாகவும் தெரிவித்தார். முதல் திருமணத்தில் பெரிதளவில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தன்னை நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் பல ஹோட்டல்களில் நாங்கள் ஒன்றாக இணைந்து பல மணி நேரம் செலவழித்துள்ளோம். தன்னுடைய முதல் கணவரை உடனடியாக விவகாரத்து செய்யுமாறு கூறி மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை வற்புறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைத்தார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஆர்.சி நகரில் உள்ள திருவீதி அம்மன் கோயிலில் எங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், பல இடங்களில் அழைத்து சென்று தன்னை மனைவி என அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். திருவான்மியூரில் ஒரு வீட்டை வாடகை எடுத்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், 2024 ஆம் ஆண்டு கோயமுத்தூருக்கு அழைத்து சென்று ரங்கராஜின் பெற்றோருக்கு தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், தனது மகனுக்கு பள்ளியில் தந்தை என கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் தான் கர்ப்பமான நிலையில், தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தததாகவும், மேலும் மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில் தன்னை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார். நான் ஒத்துக்கவில்லை என்பதால் உடல் ரீதியாக தாக்க தொடங்கினார். இதில் எனது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் எனது ஐபோன், ஐபோடை உடைத்து விட்டார். எனது ஐபோனை சரிசெய்து தருவதாக கூறி எடுத்து சென்றவர் திருப்பி தரவில்லை. நாங்கள் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்பட ஆதாரங்களை டெலிட் செய்துவிட்டார்.  ஒரு கட்டத்தில் தான் வேண்டுமா? குழந்தை வேண்டுமா? என கூறி கருகலைப்பு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்.

மேலும் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், உன்னையும் உன் மகனையும் விடமாட்டேன் என மிரட்டினார். அப்போது விசாரித்து பார்த்த போது தான் தன்னிடம் பொய் சொல்லி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வாழ்ந்து வந்தது தெரிய வந்ததாகவும், பின்னர் பலமுறை மாதம்பட்டி ரங்கராஜை தான் சந்திக்க முற்பட்ட போது அவர் சந்திக்க மறுத்து விட்டதாகவும், பின்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு தளத்திற்கு சந்திக்க சென்ற போது தன்னை ரங்கராஜூம் அவரது மேலாளர் சர்மாவும் சேர்ந்து   தாக்கியதாகவும், இதே போல ஹோட்டலிலும் தன்னை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் 6 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், தன்னை நம்பவைத்து மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகவும், அவருடன் ஒன்றாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக ரங்கராஜ் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ஜாய் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வெளியே வந்த ஜாய் செய்தியாளர்களை சந்தித்தார்.

“ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியுள்ளார். தொடர்ந்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் முதல் மனைவியோடு தொடர்பில் இருப்பது எனக்கு தெரியாது.

நானும் ரங்கராஜும் இணைந்து வாழ்ந்தது உண்மை. ஆனால் இப்போது என்னை விட்டு விலகியுள்ளார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும். ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறையும், பிரபல தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட் என இரண்டு இடங்களில் வைத்து என்னை தாக்கினார். குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும் என ரங்கராஜ் தெரிவித்ததாக பரவிவரும் தகவல் உண்மையா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ஆமாம் அப்படிதான் அவர் சொல்லி வருகிறார் என ஜாய் தெரிவித்தார்.

ரசிகையின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

MUST READ