- Advertisement -
மற்ற ஓடிடி தளங்கள் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்திய திரைப்படங்களை பொறுத்தமட்டில் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஓடிடி தளங்களின் தனித்துவமே, தணிக்கைக்கு அப்பாற்பட்ட அதன் உண்மையான படைப்புதான். வன்முறை, பாலியல், வசவு சொற்கள், போதை பயன்பாடுகள் என வழக்கத்தில் நாம் திரையில் காண வாய்ப்பில்லாத காட்சிகளை அப்பட்டமாக ஓடிடி தளங்கள் காட்சிப்படுத்தும். படைப்பின் வீரியத்தை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்த ஒரு ஊடகமாக ஓடிடி தளங்கள் செயல்படுகின்றன. ஓடிடி தளங்களின் இந்த போக்குக்கு இந்தியாவில் முட்டுக்கட்டை விழுந்தது. அரசின் நெருக்கடி மற்றும் சினிமா ஆர்வலர்களின் நெருக்கடி காரணமாக தணிக்கை செய்யப்பட்ட படைப்புகளை வெளியிடும் கட்டாயத்துக்கு நெட்ஃபிளிக்ஸ் ஆளானது.
