பாலிவுட்டின் ஸ்டார் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது . அந்தப் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருந்தார். சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வந்து தோன்றிய அதிரடி காட்டினார். இருவரும் இணைந்து காணப்பட்ட காட்சிகளுக்கெல்லாம் தியேட்டர்கள் அலறின. படத்தின் வசூல் 800 கோடியைத் தாண்டி எகிறியது.
இந்நிலையில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இருவரும் இணைந்து புதிய படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘பதான்’ மற்றும் ‘டைகர்’ என்ற கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் இணையும் மல்டிவேர்ஸ் படமாகவும் இந்தப் படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அந்தப் படம் தான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.