Homeசெய்திகள்சினிமாஅடுத்த சரவெடி ரெடி... அட்லீ- ஷாருக் கான் கூட்டணியின் 'ஜவான்' பட அப்டேட்!

அடுத்த சரவெடி ரெடி… அட்லீ- ஷாருக் கான் கூட்டணியின் ‘ஜவான்’ பட அப்டேட்!

-

ஷாருக் கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழில் கலக்கிய இயக்குனர் அட்லீ தற்போது இந்தியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

jawan
jawan

ஜவான் படத்தில் ஷாருக் கான் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். ஜவான் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பதான் படத்தின் அசுர வெற்றி ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் ஜூன் 2-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் நிறைவு பெற்றுள்ளது. மேலும் பின் தயாரிப்பு பணிகள் அதிகம் இருப்பதால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜவான் படத்தை ஷாருக் கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

MUST READ