நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற CSK- SRH அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற CSK- SRH அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி வென்றது.


சென்னை அணி என்றாலே அதைக் காண ரசிகர்களுடன் திரைத்துறை பிரபலங்களுக்கும் குவிந்துவிடுவது வழக்கம். நேற்று நடைபெற்ற போட்டியைக் தனுஷ், சதிஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் வந்திருந்தனர்.

தனுஷ், பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் காண வந்திருந்தனர். அவர்களுடன் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, குழந்தைகளுடன் வந்திருந்தார்.
அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.