பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் (நேற்று) ஜூலை 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். ஆனால் படத்திற்கு கலவியான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் சிறிய மாற்றம் செய்ய இயக்குனர் சங்கர் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது இந்தியன் 2 திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரங்கள் இருக்கிறது. இதில் கமல்ஹாசன் இடம்பெறும் சண்டை காட்சிகள் மட்டுமே 20 நிமிடங்கள் தொடர்வதால் அது ரசிகர்களுக்கு படத்தின் சுவாரசியத்தை சற்று குறைக்கிறது. இதன் காரணமாக இயக்குனர் சங்கர், இந்தியன் 2 படத்தின் நீளத்திலிருந்து 20 நிமிடங்கள் மட்டும் ட்ரிம் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. படமானது கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸுக்கு பின்னர் ‘இந்தியன் 2’ படத்தில் செய்யப்படும் மாற்றம் …. ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு!
-
- Advertisement -