spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சங்கர் பட நடிகர்!

ஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சங்கர் பட நடிகர்!

-

- Advertisement -

சங்கர் பட நடிகர், ஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.ஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சங்கர் பட நடிகர்!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் முக்கியமான இயக்குனரான மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சித்தார்த். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு ‘சித்தா’ திரைப்படம் நல்ல பெயரையும், புகழையும் பெற்று தந்தது. அடுத்தது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘3BHK’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஆங்கில வெப் தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. Unaccustomed Earth என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த வெப் தொடரை வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் மற்றும் ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இதை வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆங்கில வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் சங்கர் பட நடிகர்!இந்த வெப் தொடரில் சித்தார்த், ப்ரீடா பிண்டோவுடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார் எனவும், இது அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் சிறுகதையை மையமாக வைத்து 8 எபிசோடுகளாக எடுக்கப்படுகிறது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த வெப் தொடரின் சில எபிசோடுகளை லஞ்ச் பாக்ஸ் பட இயக்குனர் ரித்தேஷ் பத்ரா இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் சித்தாரத்துக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ