spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மகாராஜா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சாந்தனு.... காரணம் என்ன?

‘மகாராஜா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சாந்தனு…. காரணம் என்ன?

-

- Advertisement -

கடந்த ஜூன் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. 'மகாராஜா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சாந்தனு.... காரணம் என்ன?வித்தியாசமான கதைக்களில் உருவாகியிருந்த இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியான பின்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆகியும் இப்படம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சாந்தனு தான் என்று இயக்குனர் நித்திலன் சாமிநாதன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது இயக்குனர் நித்திலன் சாமிநாதன் தனது முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பாகவே மகாராஜா படத்தில் கதையை நடிகர் சாந்தனுவிடம் கூறினாராம். 'மகாராஜா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சாந்தனு.... காரணம் என்ன?சாந்தனுவிற்கு கதை பிடித்திருந்தாலும் தயாரிப்பாளர்கள் யாரும் படத்தை தயாரிக்க முன் வரவில்லை. எனவே படம் நீண்ட நாட்களாக தள்ளிப் போக நித்திலன் சாமிநாதன் குரங்கு பொம்மை படத்தை கையில் எடுத்தாராம். இது தொடர்பாக நித்திலன் சாமிநாதன் பேசியிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் சாந்தனு, மகாராஜா படத்தில் ஏன் நடிக்க மறுத்துவிட்டார்? அதற்கு சாந்தனுவின் தந்தை பாக்யராஜ் தான் காரணமாக இருக்கும் என்று விவாதித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் சாந்தனு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், “முதலில் நித்திலன் சாமிநாதன் மகாராஜா படத்தை உயிர்பித்து உலக அளவில் அங்கீகாரத்தை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாவதாக 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் எனக்கு கிரெடிட் கொடுத்தது நம்ப முடியாத மகிழ்ச்சியை தருகிறது. அதேபோல் மகாராஜா படத்தின் கதையை நிராகரித்ததில் எனக்கும் என் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சமயத்தின் தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. நித்திலன் சாமிநாதன் என்னை அனுப்பியது என் அப்பாவுக்கு கூட தெரியாது. ஆனால் இன்று கன்டென்ட் தான் பின்பு என்று நிரூபித்துள்ளது. நான் எப்போதும் சிறந்த கதையை தான் தேடுகிறேன் காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ