spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸை தொடர்ந்து யாஷூடன் இணையும் ஸ்ருதி ஹாசன்

பிரபாஸை தொடர்ந்து யாஷூடன் இணையும் ஸ்ருதி ஹாசன்

-

- Advertisement -
பிரபாஸை தொடர்ந்து யாஷ் நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

மலையாளத்தில் ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். தமிழில் மாதவனுக்கு ஜோடியாக நலதமயந்தி படத்தில் நடித்திருப்பார். இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக மலையாள சினிமாவில் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் யாஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

we-r-hiring
கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொடி கட்டி பறந்தவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் மாபெரும் ஹிட் அடித்தன. மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. தொடர்ந்து யாஷ் நடிக்கும் 19-வது படத்தின் அறிவிப்பும் வெளியானது. அதன்படி, யாஷின் 19-வது படத்துக்கு டாக்‌ஷிக் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கேவிஎன் புரொடக்சன்ஸ் படத்தை தயாரிக்கிறது. ரூமியின் புகழ்பெற்ற, ‘எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடுகிறது’ என்கிற வாசகத்தை படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும், அதில் ஸ்ருதிஹாசனும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ