Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் வெளியான சிபிராஜின் 'மாயோன்'!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் வெளியான சிபிராஜின் ‘மாயோன்’!

-

சிபிராஜின் மாயோன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாயோன். இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிஷோர். N இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அருள் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார்.

மாயோன் மலை எனும் ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலை தொல்லியல் ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் வேளையில் அங்கு விலைமதிப்பில்லாத புதையல் கிடைக்கிறது. அந்தப் புதையலை ஹீரோவும், வில்லனும் கைப்பற்ற நினைக்கிறார்கள். இதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் முழு நீளக்கதையாகும்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

MUST READ