spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

சித்தார்த் நடிக்கும் புதிய படம்….. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

-

- Advertisement -

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.சித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு சித்தா திரைப்படம் வெளியானது. நடிகர் சித்தார்த் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்திருந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.சித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். சித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!அதேசமயம் மிஸ் யூ என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சித்தார்த், எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.சித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! சித்தார்த்தின் 40 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார் , தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.சித்தார்த் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ