spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிக்மா தக் ரூல்ஸ் ........'தக் லைஃப்' படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ!

சிக்மா தக் ரூல்ஸ் ……..’தக் லைஃப்’ படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ!

-

- Advertisement -

கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் திரைப்படம் வெளியானது. சிக்மா தக் ரூல்ஸ் ........'தக் லைஃப்' படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ!இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் கமல் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து அபிராமி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மல்டி ஸ்டாரர் படமாகவும் ஆக்சன் படமாகவும் தயாராகி வருவதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் இருவரும் இணைந்ததாகவும் அதன் பிறகு ஜெயம் ரவி மீண்டும் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக அசோக் செல்வன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் படத்தில் சிம்பு இணைந்துள்ள தகவல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பு மே 8ஆம் தேதி வெளியாகும் என்று நேற்றே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் Sigma Thug Rules நாளை (மே 8) காலை 10 மணி அளவில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம்  தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதை சிம்பாலிக்காக தெரிவித்திருக்கிறார்கள்.

MUST READ