spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

-

- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் சிலம்பரசன்!

நடிகர் விஜய் பாணியில் தன்னுடைய ரசிகர்களுக்கு அவரே பிரியாணியை பரிமாறினார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன், கடந்த காலங்களில் குறிப்பிட்ட இடைவேளையில் ரசிகர்களுடன் சந்திப்பை நடத்தி புகைப்படம் எடுத்து வந்தார்.

we-r-hiring

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

ஆனால் சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தின் வெற்றி சமயத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டார். ஆனால் அப்போது கொரோனா பரவல் காரணமாக அந்த சந்திப்பு ரத்தானது.

இந்த நிலையில் தற்போது சிலம்பரசன் ரசிகர் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டு அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

அதன்படி அம்மன்ற நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சென்னை வந்து நடிகர் சிலம்பரசனை சந்தித்தனர் மேலும் அவர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர், தன்னை பார்க்க வந்த நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் பாணியில் பிரியாணி வழங்கப்பட்டது அதனை நடிகர் சிலம்பரசனே பரிமாறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

MUST READ