கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார்.
நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் இணைந்திருப்பதால் பல மடங்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதன்படி படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே முழு வீச்சில் தயாராகி வரும் தக் லைஃப் படத்தை படக்குழு இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பும் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகிறது.


