நடிகர் சிம்பு பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படமான ‘STR 48’ திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பான் இந்தியா அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. எனவே இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதால் இதன் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து தயாராகி வரும் நடிகர் சிம்பு இந்த படத்தில் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிம்பு இரட்டை கதாபாத்திரங்களை நடித்திருந்தார். இந்நிலையில் இந்த புதிய படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.


