நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இருப்பினும் படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் படமானது மிகவும் பிரம்மாண்டமாக பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகிறது என்றும் செய்திகள் வெளியானது. எனவே ரசிகர்கள் பலரும் STR 48 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்திருந்த இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இந்த படம் தள்ளிப்போக நடிகர் சிம்புவும், கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். எனவே தக் லைஃப் திரைப்படம் தான் சிம்புவின் 48வது படமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்பு, 2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதன் பின்னர் தான் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆகையினால் இந்த படம் சிம்புவின் 50 ஆவது படமாக உருவாகும் என்றும் இதன் படப்பிடிப்பு 2025 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கப்படலாம் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை நடிகர் சிம்புவே தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் STR 50 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம்…. அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் படப்பிடிப்பு!
-