சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பாடகி கெனிஷா, நடிகர் ரவி மோகனுடன் கைகோர்த்து வந்திருந்தார். திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் இருவரும் இணைந்து வருகை தந்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது. அதாவது நடிகர் ரவி மோகன் – கார்த்தியின் விவாகரத்திற்கு கெனிஷா தான் காரணம் என்றும் கெனிஷாவும், ரவி மோகனும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் இருவரும் இணைந்து ஐசரி கணேஷ் மகளின் திருமணத்திற்கு வந்திருந்தது தான் பெரிய பேச பொருளாகி வருகிறது.
இந்நிலையில் பாடகி கெனிஷா சமீபத்தில் நடந்த பேட்டியில் தன்னுடைய சோல்மேட் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நான் இரண்டு சோல்மேட்களை பார்த்துவிட்டேன். அதில் ஒருவர் என்னுடைய தோழி. மற்றொருவர் வித்யாசமானவர். நாம படித்திருக்கிறோம், சுதந்திரமாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதையெல்லாம் மாற்றியவர் அவர்தான். எனக்கு பாதுகாப்பாக, உறுதுணையாக, மரியாதை கொடுப்பவராக, வெறுப்பு இல்லாதவராக, கோபம் இல்லாதவராக, எதிர்பார்ப்பு இல்லாதவராக இருப்பவர்தான் என்னுடைய சோல்மேட். இந்த ரிலேஷன்ஷிப்பில் நான் நிம்மதியாக இருக்கிறேன்.
யாருக்கும் நான் கெடுதல் செய்யவில்லை. இருக்கிற வரைக்கும் சந்தோஷமாக இருப்போம். சமூக வலைதளங்களில் என்னை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வருகிறது. அது என் பிரச்சனை கிடையாது. உங்க வாழ்க்கையில் நீங்க மகிழ்ச்சியாக இல்லை. உங்களுடைய கோபத்தை வேற யார்கிட்டயாவது காட்ட வேண்டும் என்பதற்காக என் மேல காட்டுறீங்க. இதுக்கெல்லாம் நான் கவலைப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -