spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' படத்தின் வெற்றிக்காக ஜி.வி.பிரகாஷுக்கு கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

‘அமரன்’ படத்தின் வெற்றிக்காக ஜி.வி.பிரகாஷுக்கு கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றிக்காக ஜி.வி. பிரகாஷுக்கு கிஃப்ட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.'அமரன்' படத்தின் வெற்றிக்காக ஜி.வி. பிரகாஷுக்கு கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்! இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனை இதுவரை பார்க்காத பரிமாணத்தில் காட்டியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் சிவகார்த்திகேயனின் நடிப்பும் சாய் பல்லவியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

we-r-hiring

அதேசமயம் ஜி.வி. பிரகாஷின் இசை இந்த படத்திற்கு பெரும் பலம் கொடுத்துள்ளது. எனவே அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு வாட்ச் ஒன்றை கிஃப்ட்டாக கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

MUST READ